அன்னபூரணியின் அடுத்த பரிணாமம்... கல்யாண அறிவிப்பு...

Update: 2024-10-29 07:49 GMT

தன்னை அம்மனின் அவதாரம் என கூறிக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் ஆன்மீக சக்தி பீடம் நடத்தி வருபவர் அன்னபூரணி.


காலில் விழுந்து கதறி அழும் பக்த கோடிகள் மாதிரி நல்ல விஷ்வல் வைக்கவும்...

வேறு ஒருவரின் கணவரான அரசு என்பவரை அபகரித்த‌தாக தனியார் தொலைக்காட்சியின் பஞ்சாயத்தில் சிக்கி அன்னபூரணி பிரபலமாகியிருந்தார். பின்னர், அரசு இறந்து விட, அம்மன் வேடமிட்டு, அருளாசி வழங்கி பரபரப்பை கூட்டினார், அன்னபூரணி.

சூலாயுதத்துடன் கன கச்திதமாக அம்மன் வேடத்தில் தோன்றி அருள்வாக்கு, அபிஷேகம், ஆசி என பிசியாக இருக்கும் அன்னபூரணியை நம்பி, பலர் குவியத் தொடங்கியதும், தன்னை அம்மனின் அவதாரம் எனக் கூறி சர்ச்சையையும் ஏற்படுத்தினார்.


ஆதி பராசக்தியின் அவதாரம் நான் தான் என பரபரப்பை ஏற்றி வந்த அவர், தற்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, அனைவருக்குமே அதிர்ச்சி ரகம்...

'பக்தர்களுக்கு ஒரு அறிவிப்பு' என்ற பெயரில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

'நவம்பர் 28ஆம் தேதி அரசுவின் இன்னொரு அத்தியாயம், அதாவது அடுத்த பரிணாமம்...'

என பூடகமாக அவர் ஆரம்பித்த வார்த்தைகள், பக்தர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியது.

"தன்னை, அப்பாற்பட்ட சக்தி இயக்கினாலும், தனி ஒரு பெண்ணாக இருப்பதால், சமுதாயத்தினால் தொந்தரவு இருக்க‌க் கூடாது என்றும் பாதுகாப்பு தேவை" என்றும் குறிப்பிட்டிருக்கும் அன்னபூரணியின் அடுத்தடுத்த வார்த்தைகள் அணுகுண்டு ரகம்...

அதாவது, "தனது ஆன்மீகத்திற்காக தன்னையே அர்ப்பணித்திருக்கும் ரோகித் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அதுவும், அரசுவுக்கும் அன்னபூரணிக்கும் திருமணம் நடைபெற்ற தேதியான நவம்பர் 28ம் தேதிதான் இந்த திருமணமும் நடக்கும் என அறிவித்த கையோடு,

விருப்பம் உள்ளவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கிச் செல்லுமாறும் தெரிவித்திருப்பதை பார்த்து பதறிப்போய் இருக்கிறார்கள், அவரது பக்தர்கள்...

அதே நேரத்தில், ஏற்கனவே 2 திருமணங்கள் செய்த அன்னபூரணி, மூன்றாவது திருமணம் செய்யப் போவதாக அறிவித்திருப்பது நெட்டிசன்களால், சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்