"அ.மலைக்கு வார்னிங்" - சிவகங்கையை பரபரப்பாக்கிய போஸ்டர்

Update: 2024-05-28 14:00 GMT

சிவகங்கையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்துத்துவவாதி என குறிப்பிட்டதற்கு அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் கொதித்தெழுந்து வருகின்றனர். இந்நிலையில், போஸ்டரில் ஜெயலலிதா, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்களுடன் இணைந்து நிற்கும் படங்களை அச்சிட்டு, அண்ணாமலை தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். மன்னிப்பு கேட்கவில்லையெனில் வழக்கு தொடரப்படும் என்றும் அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்