"பீர் உற்பத்தியை அதிகரிக்க மது ஆலைகளுக்கு ஆணை.." பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், குளிர்ந்த பீருக்கான தேவை பெருகுவதால், பீர் உற்பத்தியை அதிகரிக்கும்படி மது ஆலைகளுக்கு டாஸ்மாக் நிறுவனம் ஆணையிட்டுள்ளதைக் கண்டித்துள்ளார். மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் தேவையை நிறைவேற்றுவது தான் அரசின் கடமை என்றும், பீர் போன்ற மதுவகைகளின் தேவையை நிறைவேற்றுவது கடமை அல்ல எனவும் அவர் சாடியுள்ளார். அதற்கு பதில் மது வணிகத்தைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டையும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வையும் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.