அமெரிக்காவில் தமிழக கோயில் சிலைகள் - அதிர்ந்து போன சிலை கடத்தல் தடுப்பு போலீசார்

Update: 2024-10-02 10:08 GMT

அமெரிக்காவில் தமிழக கோயில் சிலைகள் - அதிர்ந்து போன சிலை கடத்தல் தடுப்பு போலீசார்

தமிழ்நாட்டை சேர்ந்த சோமஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தொன்மை வாய்ந்த சோமஸ்கந்தர் சிலையானது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் என்கிற மியூசியத்தில் உள்ளது. இதனை ஆன்லைன் வாயிலாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சிலையானது 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் இந்த சிலையின் மதிப்பு சுமார் எட்டு கோடி ரூபாய் என்றும் தொல்லியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சிலையை மீட்கும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்