அலர்ட்.... அலர்ட்....சென்னையில் போக்குவரத்து மாற்றம்....

Update: 2024-03-04 03:11 GMT

பிரதமரின் வருகைக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமரின் வருகையை ஒட்டி, 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நந்தனம், YMCA மைதானம், விமான நிலையம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். இதனால், நந்தனத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், இந்த சாலைகளை வாகன ஓட்டிகள் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இன்று பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் இந்த சாலைகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, மத்ய கைலாஷ், இந்திரா காந்தி சாலை, கத்திப்பாரா, மவுண்ட் பூந்தமல்லி சாலை ஆகியவற்றிலும் அசோக் பில்லர், விஜயநகர் சந்திப்பு, அண்ணா சிலை, மவுண்ட் ரோடு, தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை ஆகியவற்றிலும் வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்