கோலாகலமாக தொடங்கிய ஐப்பசி திருக்கல்யாண விழா - அபிஷேகத்தில் பிளிறிய காந்திமதி

Update: 2023-10-14 01:58 GMT

நெல்லை நெல்லையப்பர் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண விழாவின் தொடக்க நிகழ்ச்சியான கால்நடுதல் விழா, விமரிசையாக நடைபெற்றது. கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள அனுக்ஞை விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.

மகா தீபாராதனைக்குப்பின் திருக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள அலுப்பு மண்டபத்தில் நடப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது, கோயில் யானை காந்திமதி பிளிறி மரியாதை செய்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்