எய்ட்ஸ் பாதித்த பெண்ணுடன் 200 பேர் உடலுறவு.. பல்லாயிரம் பேருக்கு பரவியிருக்கலாம்.. பகிரங்க அறிவிப்பு

Update: 2024-05-21 10:11 GMT

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் எய்ட்ஸ் பாதித்த பெண் பாலியல் தொழிலாளி ஒருவரால், நேரடியாக 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஹெச்ஐவி அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். பாலியல் தொழிலாளியான லிண்டா லெக்செஸ், தனக்கு ஹெச்ஐவி-பாசிட்டிவ் எனத் தெரிந்திருந்தும், 2022 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்ததை மாகாண காவல்துறை கண்டறிந்துள்ளது. 200 பேர் வாயிலாக கடந்த 2 ஆண்டுகளில் பல்லாயிரம் பேருக்கு, வைரஸ் பரவியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அப்பெண் உடன் பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு பகிரங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 211 பேர் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்