வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நடிகர் பிரசாந்த்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி செய்த நடிகர் பிரசாந்த், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்த அவர், மூலவரான முருகனை வணங்கிய பின்பு, பெருமாள், சண்முகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். அதனை தொடர்ந்து திருச்செந்தூர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோட்டை தெரு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான, அரிசி பருப்பு போர்வை மற்றும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.