ஆருத்ரா, ஹிஜாவு... அதிர வைத்த மாஸ்டர் மைண்ட்-டுகள்..! - திடுக்கிட்ட போலீசார் - அம்பலமான ரகசியம்

Update: 2024-03-07 14:37 GMT

ஆருத்ரா, ஹிஜாவு போன்ற நிறுவனங்கள், பெரியளவில் குற்ற மோசடிகளில் ஈடுபடுவதற்கு, ஒரே முகவர்களே உறுதுணையாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல நிறுவனங்களான ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ், எல்பின். நிறுவனங்களின் வழக்கை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அடுத்தபடியாக, நிறுவனங்களில் பணியாற்றிய முகவர்களைக் கண்டறிந்து அவர்களின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முகவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ் போன்ற அதிகளவு பண மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களில், மூளையாக செயல்பட்டது ஒரே முகவர்கள்தான் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு ஏஜெண்ட் அவர்களுக்கு கீழ் சுமார் 100 நபர்களை வைத்துக்கொண்டு, நிறுவனம் தொடங்கும்போது அவர்களை அதில் இணைய வைத்து, பெரிதளவில் கமிஷன் பெறுவது அம்பலமாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட 100 பேரும் லாபமடைவது போல காண்பித்து, அதன் மூலம் பொதுமக்களை அதில் இணைய வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் வேறொரு நிதி நிறுவனம் தொடங்கும்போது, இதே பாணியில் முகவர்கள் மோசடியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்