ஆசை வார்த்தையில் விழுந்த கன்னி..பார்க்காத காதலனுக்கு வித விதமாய் `பரிசு' - "ஒரே புடி.. ஆளே காலி"

Update: 2023-10-09 03:25 GMT

சென்னை அயனாவரத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரில் மேட்ரிமோனி இணையதளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார். ஆஷிஷ் சன்னார் என்பவர் பொய்யான பெயரில் பதிவு செய்து, அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இதனிடையே, அந்த நபர் பெண்ணிற்கு மதிப்புமிக்க பரிசுகளை பார்சல்களாக அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு, புதுடெல்லி விமானநிலையத்தில் இருந்து ஒருவர் தொடர்புகொண்டு, 10 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி, பார்சல்களை கொண்டு செல்லுமாறு கூற, அதனை நம்பி அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கில் பெண் பணத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் அளிக்கவே, போலீசார் விசாரணை நடத்தினர். அதில் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், உத்தரபிரதேசம் சென்று அந்த நபரை போலீசார் கைது செய்தனர். கைதான நபர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவரிடம் இருந்து 8 செல்போன்கள், லேப்டாப், 3 டெபிட்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்