தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பாப்பான் கால்வாயில், வெள்ளப்பெருக்கு கரை புரண்டு ஓடுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழையால், கருப்பாநதி அணைக்கு ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இதனால் கருப்பாநதி ஆறு, பெரியாறு, பாப்பான் கால்வாய், சிவராம் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க, காவல்துறை மற்றும் நகராட்சி சார்பில் பள்ளிவாசல் கோயில்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது