பொங்கல் பரிசு ரூ.1000-க்காக தாயின் தலை சிதைத்து உயிரையே எடுத்த மகன்

Update: 2024-01-11 08:02 GMT

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி சிவந்திப் பூ. கணவரை இழந்து தனியே வசித்து வந்த இவருக்கு, 2 மகன்கள் உட்பட ஆறு பிள்ளைகள் உள்ளனர். இதில், மூதாட்டியின் மகனான முருகன் என்பவர், மூதாட்டியின் பெண்ஷன் பணத்தை கேட்டு அடிக்கடி தகராறு செய்திருக்கிறார். சம்பவத்தன்று, மதுபோதையில் வந்த முருகன், மூதாட்டியின் ஓட்டு வீட்டை எழுதி தரக்கோரி தகராறு செய்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாயை கேட்டும் சண்டை பிடித்திருக்கிறார். இதில், மூதாட்டி பணம் தர மறுத்ததால், அவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு முருகன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மூதாட்டியின் மகன் முருகனை கைது செய்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்