ஒர்க் அவுட் செய்யும் பொது சண்டை... ஜிம்முக்குள் துடிதுடித்து இறந்த இருவர் - சென்னை அருகே பயங்கரம்

Update: 2023-09-01 13:12 GMT

செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில், இருவர் அரிவாளால் வெட்டப்பட்டு சடலமாகவும், ஒருவர் உயிருக்கு போராடிய நிலையிலும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு சடலங்களையும், படுகாயமடைந்த இளைஞரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டது பெருங்காவூரை சேர்ந்த ஸ்ரீகாந்த், விஜய் என்பதும், படு காயங்களுடன் தப்பியவர் அஜய்குமார் என்பதும் தெரியவந்தது. உடற்பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட தகராறில் மூவரும் அரிவாளால் வெட்டப்பட்டது தெரியவர, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்