இளைஞரை தாக்கிய காவலர் - தலையில் வழிந்த ரத்தம் - போராட்டத்தில் மக்கள்..எஸ்பி போட்ட உத்தரவு
போளூர் அடுத்த எட்டிவாடி பகுதியில் களம்பூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது செனாங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்களான ராஜா, அவரது தம்பி சுரேஷ் ஆகியோர், மினிவேனில் வந்தனர். அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது காவலர் விக்னேஷ் என்பவர், வேனில் இருந்த ராஜாவை தாக்கியதாக தெரிகிறது. அதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர், காவலரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காவலர் விக்னேஷை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, எஸ்.பி. கார்த்திகேயன் உத்தரவிட்டார்.