பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பல் - கூடங்குளத்தில் பரபரப்பு... திணறும் அதிகாரிகள் | Nellai Ship
பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பல்
கூடங்குளத்தில் பரபரப்பு... திணறும் அதிகாரிகள்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், பாறை இடுக்கில் சிக்கிய மிதவை கப்பலை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு பார்ஜி என்ற மிதவை கப்பல் மூலம் இரண்டு நீராவி ஜெனரேட்டர்கள் கொண்டுவரப்பட்டன. கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுகம் அருகே வந்த போது, இழுவை கப்பல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பாறை இடுக்கில் மிதவை கப்பல் சிக்கிக் கொண்டது. மேலும், மிதவை கப்பலின் கீழ் பகுதி சேதம் அடைந்து உள்ளே தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட இழுவை கப்பல் மூலம், மிதவை கப்பலை இழுக்கும் போது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடற்கரையில் இருந்து 300 அடி தொலைவில் பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பல் வரை தண்ணீருக்குள் கற்கள், மணல் நிரப்பி சாலை அமைத்து நீராவி ஜெனரேட்டரை கிரேன் மூலம் மீட்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.