சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை, பல்வேறு காலகட்டங்களில் 5 பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கூடுதல் நீதிநீதிபதிகளாக பதிகளாக செயல்பட்டு வந்த நக்கீரன், மாலா, சௌந்தர், சுந்தர் மோகன், சுரேஷ் பாபு ஆகிய 5 பேரையும், நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 5 பேரும் இன்று மாலை 5 மணிக்கு நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். தலைமை நீதிபதி கங்காபுர்வாலா இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.