சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து | electric train | Chennai

Update: 2023-10-07 10:11 GMT

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான, 44 மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் தாம்பரம் இடையே, நாளை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை, நாளை காலை 10.30 மணியிலிருந்து மதியம் 2.30 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் சேவை, நாளை காலை 10 மணி முதல் மதியம் 3:30 மணி வரையும், செங்கல்பட்டு - கடற்கரை இடையேயான ரயில் சேவை, காலை 9.40 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்