பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்குற மொமென்ட்! - 2K கிட்ஸ் Vs 90ஸ் கிட்ஸ்

Update: 2022-10-13 15:26 GMT

மாவட்ட ஆட்சியர்களிடமே நேரடியாக மெசேஜ் செய்து லீவ் கேட்கும் 2K கிட்ஸ் குறித்து 90ஸ் கிட்ஸ் பேசி வருவது தான் இன்று வலைதலங்களில் அதிகம் உலாவும் சுவாரஸ்ய விவாதமாக மாறி போயுள்ளது.

90ஸ் கிட்ஸ் Vs 2K கிட்ஸ் என்பது பசுமை மாறாத பல நினைவுகளை அசைபோட வைக்கும் எவர்கிரீன் டாப்பிக். காதல்... நட்பு... தேடல்... பாடல் என எதை எடுத்து கொண்டாலும் 2K கிட்ஸை பார்த்து பார்த்து குமுறும் 90ஸ் கிட்ஸ் இங்கு ஏராளம்.

நாங்க எல்லாம் அந்த காலத்துல... எனஅட்வைஸ் செய்ய ஆரம்பிக்கும் பெற்றோரின் பேச்சை சலிக்காமல் கேட்டு கேட்டு வளர்ந்த 90ஸ் கிட்ஸை... இன்று அதே டயலாக்கை சொல்லி புலம்ப வைத்து வருகிறார்கள்.. இந்த 2K கிட்ஸ்.

எந்த காலமானாலும் சரி.. பள்ளிக்கூட செல்ல வேண்டு மென்றால் அடம்பிடிப்பது தான் குழந்தைகளின் சுபாவம். அதிகபட்சமாக பள்ளிக்கூடம் செல்லாமல் இருக்க குழந்தைகள் கையில் எடுக்கும் ஆயுதம் திடீர் வயிற்று வலியாகதான் இருக்கும். அதுவும் ஒரு மழை பெய்தால் போதும்... 'லீவ் எப்போ விடுவாங்க'ணு டிவி முன்பு காத்து கிடந்தவர்கள் 90ஸ் கிட்ஸ்.

ஆனால் இன்றோ... நேராக மாவட்ட ஆட்சியருக்கே லீவ் விடுங்க பிலீஸ்.. என டப்புனு போனை எடுத்து ஒரு மெசெஜை தட்டி விட்டுவிடுகிறார்கள்.. இந்த 2K கிட்ஸ்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தம்மிடம் லீவ் விட சொல்லி ஒரே ஒரு சிங்கிள் ரெக்வஸ்டை முன்வைத்த மாணவனுக்கு படிப்பு குறித்து சீரியஸாக அட்வைஸ் செய்திருந்தார், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி.

ஆனால் இன்றோ விடாமல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம், லீவ் விட சொல்லி மெசெஜ் மேல் மெசெஜ் செய்து கெஞ்சி இருக்கிறார்கள், 2K கிட்ஸ்.

'உங்களையே நம்பி இருக்கேன்'.. 'எப்படியாவது எங்க எல்லாருக்கும் லீவ் விட்டு விடுங்க பிலீஸ்.. உங்களுக்கு என் மனசுல கோயிலே கட்டுறேன்'... 'படிச்சு படிச்சு பைத்திய பிடிக்கிற மாதிரி இருக்கு மேம்'.. 'நாளைக்கு மட்டும் லீவ் இல்லனா நான் பைத்தியமாயிடுவேன் போல' என மாவட்ட ஆட்சியருக்கு மெசெஜ் செய்திருக்கிறார்கள், இந்த குறும்புகார மாணவர்கள்.

கடந்த 10 ஆம் தேதி மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததும்... மறக்காமல் நன்றியும் தெரிவித்திருக்கிறான், ஒரு மாணவன்.

இப்படி தனது இன்பாக்ஸில் குவிந்து கிடக்கும் மாணவர்களின் லீவ் ரெக்வஸ்ட்களை ரசித்ததோடு நிறுத்தாமல் அவற்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், ஆட்சியர் கவிதா ராமு. அதை பார்த்து குமுறி வருகிறார்கள்.. 90ஸ் கிட்ஸ்.

Tags:    

மேலும் செய்திகள்