2024-ன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. ஆளுநரை அழைக்கலாமா?...வேண்டாமா? - தமிழக அரசு தீவிர ஆலோசனை?
2024-ன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்..ஆளுநரை அழைக்கலாமா?...வேண்டாமா? - தமிழக அரசு தீவிர ஆலோசனை?
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரியில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது...பொங்கல் பண்டிகை, குடியரசு தின விழா, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரின்போது அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி முறையாக வாசிக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில், சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் வாசிக்கப்படும் போதே ஆளுநர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார்... தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறியதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது. அதன்பிறகு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், 10 மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் பிப்ரவரியில் தொடங்கலாம் என தகவல் வெளியானதை அடுத்து
இந்த முறை சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு ஆளுநர் ரவி அழைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளுநரை அழைக்கலாமா அல்லது ஆளுநரை அழைக்காமலேயே கூட்டத் தொடரை நடத்தலாமா என்பது குறித்தும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. அந்த வகையில், ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதோடு, ஜனவரி மாதம் பேரவை கூட்டம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.