நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் புகார்
நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் புகார்
நடிகர் விமல், ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விமல், தம்மிடம் 5 கோடி ரூபாய் வாங்கியதாகவும், பின்னர், மேலும் ஒன்றரை கோடி ரூபாய் வாங்கியதாகவும் தெரிவித்தார். பணத்தை திருப்பிக் கேட்டபோது, நடிகர் விமல் அளித்த 2 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை திசை திருப்பவே, தம்மீது அவர் பொய் புகார் அளித்துள்ளதாக சிங்காரவேலன் குற்றம்சாட்டினார்