தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் முலம் டெல்லி செல்கிறார்.

Update: 2022-04-19 17:43 GMT
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் முலம் டெல்லி செல்கிறார். 


டெல்லியில் 2 நாள் தங்கும் அவர்,  உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பலரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்து விட்டு 21 - ந் தேதி இரவு சென்னை திரும்புகிறார். நீட் மசோதா விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேச்சு, தமிழ் புத்தாண்டு தமிழக அரசு புறக்கணிப்பு, மயிலாடுதுறை சென்ற போது கருப்பு கொடி வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்த பின் டெல்லி செல்வதால் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்