"இருங்க ஒரு செஃல்பி எடுத்துக்கிறேன்".. திரும்பி பார்ப்பதற்குள் நகையுடன் எஸ்கேப்பான "டிப்டாப் லேடி"
திருவள்ளூர் அருகே, நூதன முறையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், கூட்டுறவு சங்கத்தில் வைத்திருந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூறி, தன்னுடன் வருமாறு அழைத்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பின், நகைகளை போட்டோ எடுப்பதற்காக கழட்டி கொடுக்குமாறு கூறி, அதை தனது கழுத்தில் போட்டு செல்ஃபி எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மின்னல் வேகத்தில் அந்த பெண் தப்பிய நிலையில், சிசிடிவி காட்சி மூலம் இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.