3 வது மனைவியின் நடத்தையில் சந்தேகம் : மனைவியை அடித்தே கொன்ற கணவன்
கள்ளக்குறிச்சியில் 3வது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை மது போதையில் அடித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் 3வது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை மது போதையில் அடித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் விஜயராஜ், இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இவரது நடவடிக்கை சரியில்லாததால் முதல் மனைவி பிரிந்து சென்றார். சில மாத இடைவெளிக்கு பிறகு விஜயராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் அந்த பெண்ணும் இவருடைய நடவடிக்கையால் பிரிந்து சென்றுள்ளார். இதனிடையே மூன்றாவதாக செம்படை கிராமத்தை சேர்ந்த மேனகா என்பவரை 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். 3 வது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை மேனகா செல் போனில் பேசிக்கொண்டிருந்த போது யாரிடம் பேசுகிறாய் என விஜய் ராஜ் அவரது மனைவியை தலையில் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விஜய் ராஜை கைது செய்தனர்.