"ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி விநியோகம்" - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

நியாய விலைக் கடைகளில், பொதுமக்களுக்கு பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-08 13:44 GMT
நியாய விலைக் கடைகளில், பொதுமக்களுக்கு பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் எந்த வகையிலும் குறைந்தது அல்ல என்பதை நிலைநாட்ட, தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். நவீன அரிசி ஆலைகள் தனியார் பங்களிப்புடன் நிறுவுவது, விவசாயிகளிடம் இருந்து பெற்ற நெல்லை விரைந்து அரவை ஆலைகளுக்கு அனுப்புவது, பாதுகாப்பாக நெல்லை சேமித்து வைப்பது, தரம் மற்றும் நிறம் குறைந்த அரிசியை தனியாக பிரித்து, கடைகளுக்கு அனுப்பாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும், நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்றும், கருப்பு அரிசியை நீக்கி தரமான அரிசி வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்