பட்டாசு தொழிற்சாலையில் 27 பேர் பலியான சம்பவம் - உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலையில் பலியானோரின் குடும்பத்தாருக்கான இழப்பீட்டை ஒரு மாதத்தில் வழங்க வேண்டுமென பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Update: 2022-04-02 13:43 GMT
விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலையில் பலியானோரின் குடும்பத்தாருக்கான இழப்பீட்டை ஒரு மாதத்தில் வழங்க வேண்டுமென பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 

கடந்த ஆண்டு அச்சனகுளம் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 27 பேர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தீ விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான இழப்பீட்டை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. உத்தரவை  நிறைவேற்றப்படுவதை மாநில தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்