சர்வதேச மகளிர் தினம் : தடைகளை தாண்டி தடம் பதிக்கும் பெண்கள் - சிறப்பு தொகுப்பு | Women's Day

வலிகளே வாழ்க்கை ஆனாலும், வைராக்கியத்தைத் துணையாகக் கொண்டு தடைகளை தாண்டி தடம் பதிக்கும் மகளிருக்காக இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

Update: 2022-03-08 05:01 GMT

அடுப்பங்கரைக்கும் அழகிப் போட்டிக்கும் மட்டுமல்ல பெண்கள்...கவர்ச்சி காட்டவும்,  குடும்பம் நடத்தவும் மட்டுமல்ல பெண்கள்...

பொறுக்க வேண்டிய நேரத்தில் பொறுத்து...மறுக்க வேண்டிய நேரத்தில் எரிமலையாய் வெடிக்கும் இயற்கையான இயல்பு தான் பெண்கள்...



சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலத்தே...தமிழைக் குழந்தையாய் வளர்த்த பெருமை பெண்பாற் புலவர்களுக்கு உண்டு...

அ,ஆ,இ,ஈ படிக்கும்போதே... அறம் செய்ய விரும்பு என்று முதன் முதலில் நமக்கு வாழ்க்கையை போதித்த ஆத்திச்சூடியை இயற்றியதே ஒவையார் என்ற பெண் ஆளுமை தான்...

நாட்டை ஆளும் அரசிகளாக... தூதுவர்களாக... கவிஞர்களாக...பாதுகாவலர்களாக... ஆண்களுக்கு நிகராக அத்தனை துறைகளிலும் தடம் பதித்து வருகிறார்கள் பெண்கள்...



ஆனாலும், மூட நம்பிக்கையின் பெயரால் எத்தனை எத்தனை கொடுமைகள்...அடக்குமுறைகள்... கள்ளிப்பாலுக்கு தப்பியவர்கள் தான் இப்போதிருக்கும் பெண்கள்...



மிதிக்க மிதிக்க மேலே வந்தாலும் பாலினத்தால் பாகுபாட்டைத் தான் இந்த சமூகம் பரிசளித்ததாக பலராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது...

சரி நிகர் வேலை... சரிநிகர் கூலி...இப்படி ஆரம்பித்ததுதான் மகளிர்தின பயணம்...

முதல் உலகப் போருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய பெண்கள் ரஷ்ய முடியாட்சியையே முடிவுக்குக் கொண்டுவந்தது வரலாறு...

நாடுகள்தான் வேறு... ஆனால் பெண்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அடிமைத்தன திணிப்பு ஒன்று தான்... அத்தனை தடைகளையும் புன்னகையோடும் வலிகளோடும் கடந்து... விடுதலைக்கு முத்தமிட்டவர்கள் பெண்கள்...

உரிமை கதவைத் தட்டுங்கள்... உடன்பட மறுத்தால் உடைத்தெறிந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்பது தான் பெண் உரிமையை வலியுறுத்துவோரின் குரல்...


பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதை பொய்யாக்கி... ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பதை..."நல்லனவாக்கி அல்லன அழித்து"... புது வரலாறு படைக்கும் பெண்களை தினம் தினம் கொண்டாடுவோம்...
Tags:    

மேலும் செய்திகள்