2,500 கிலோ பிரியாணி... களைகட்டிய முனியாண்டி கோயில் திருவிழா!

மதுரை திருமங்கலம் அருகே சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ அளவு பிரியாணி சமைத்து முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வடக்கம்பட்டி முனியாண்டி சாமி கோயிலில் 87ம் ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-03-05 10:46 GMT
மதுரை திருமங்கலம் அருகே சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ அளவு பிரியாணி சமைத்து முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வடக்கம்பட்டி முனியாண்டி சாமி கோயிலில் 87ம் ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. முதலில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். 
விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகளை முனியாண்டி சாமிக்கு பலியிட்டு 2 ஆயிரத்து 500 கிலோ எடை அளவு பிரியாணி சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் உணவகங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்