தமிழகத்தில் மேலும் 2,296 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

Update: 2022-02-13 20:29 GMT
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு  குறைந்துள்ளது. 

தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 36 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது.      

கொரோனாவுக்கு ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 8 ஆயிரத்து 229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 41 ஆயிரத்து 699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 461  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையை அடுத்து கோவையில் 432 பேருக்கும், செங்கல்பட்டில் 208 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் 134 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்