தூத்துக்குடி மாநகராட்சி - யார் வசம்? - மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
மாநகராட்சி தேர்தலை சந்திக்கும் தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?... இந்த தொகுப்பில் காணலாம்...
தென் தமிழகத்தின் மிக முக்கிய நகரம்... கடல் சார் தொழில்களுக்கு பேர் போன நகரம் என பல சிறப்புகளை கொண்டது தூத்துக்குடி..
நீண்ட காலம் நகராட்சியாக இருந்து வந்த தூத்துக்குடி, 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
கிழக்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 60 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது
இதில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 337-வாக்காளர்கள் உள்ளனர். மாநகராட்சியான பிறகு நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி வாகை சூடியுள்ளது.
மூன்றாவது முறையாக தேர்தல் சந்திக்க உள்ள தூத்துக்குடி மாநகர் மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள அதேவேளை, பல்வேறு கோரிக்கைகளும் எழுந்துள்ளன..