சட்டப் போரில் ஆங்கிலேயர்களை வென்ற "சேலத்து சிங்கம்" விஜயராகவாச்சாரியார்
இந்திய விடுதலையின் 75 வது ஆண்டை கொண்டாடும் விதமாக, இன்று ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சேலத்தில் கல்லூரி ஆசிரியராக இருந்தவர் விஜயராகவாச்சாரியார். அந்தக் கல்லூரியின் முதல்வரான ஆங்கிலேயரை எதிர்த்து பணியைத் துறந்து சட்டம் படித்தார்.
ஆங்கிலேய அரசுக்கு எதிராக வழக்குகளில் வாதாடி வென்று, சேலத்து சிங்கம் எனப் பெயரெடுத்தார். வ.உ.சிதம்பரனாரின் "சுதேசிக் கப்பல்" நிறுவனத்தின், சட்ட ஆலோசகராக பணியாற்றினார்.
குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சமூக அவலங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். சேலத்துக்கே அடையாளமாக வாழ்ந்த விஜயராகவாச்சாரியார், 1944ல் சுதந்திர காற்றை சுவாசிக்காமலே மறைந்தார்.