`அடுத்து தலை தூக்கும் வேதாந்தா'- போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்.. பரபரப்பில் மதுரை

Update: 2024-11-28 11:03 GMT

மேலூர் அருகே வல்லாளப்பட்டி கிராமத்தில் நடைபெறும் போராட்டத்தில், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசைக் கண்டித்தும், சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். 11 ஊர்கள் அடங்கிய பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கிராமமக்கள், எக்காரணத்தை கொண்டும் வேதாந்தா நிறுவனத்தை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர். சுரங்கம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதோடு, சிறப்பு சட்டமன்றம் கூட்டி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என டங்ஸ்டன் கனிமத் திட்ட எதிர்ப்பு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்