10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு - "100% மாணவர்கள் பங்கேற்க வேண்டும்"

இன்று நடைபெறவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வில் 17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-02-09 02:25 GMT
கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறவில்லை. 

இந்நிலையில்  முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், திருப்புதல் தேர்வில் அனைத்து மாணவர்களும் 100 சதவிகிதம் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்