சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் மீது புகார்
சென்னை பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது முறை கேடுகளில் ஈடுபட்டாரா என்பது குறித்து ஆய்வு
சென்னை பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது முறை கேடுகளில் ஈடுபட்டாரா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது துணைவேந்தராக பணியாற்றி வரும் கவுரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இஎம்ஆர்சி என்ற துறையில் இயக்குனராக பணியாற்றிய காலகட்டத்தில், பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து கணக்கு தணிக்கை துறை , உரிய விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமாருக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது. இது குறித்து ரவிக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது நிதி முறைகேடுகளில் ஈடுபட்டாரா என்பது குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும், முடிவுகளின் அடிப்படையில் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.