உரங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உரங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்த கடைகளுக்கு சீல்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உரங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
வள்ளியூர், காவல்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் யூரியா, பொட்டாஸ் போன்ற உரங்கள் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், யூரியா உரம் வாங்க வேண்டுமெனில், கூடுதலாக அடி உரம் வாங்க வேண்டும் என, விவசாயிகளை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது. இது குறித்து தகவலறிந்த வள்ளியூர் வேளாண் துறை அதிகாரிகள், காவல்கிணறு பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உரங்களை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.