நீலகிரியில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரியில் படுகர் இன மக்களால் ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போது, அரசு சார்பில் ஆண்டு தோறும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, ஹெத்தையம்மன் திருவிழா நாளை கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் உள்ளூர்
விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.