மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு வங்கி திறப்பு

தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

Update: 2021-12-21 14:26 GMT
தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த வளாகத்தில் முதுகுதண்டுவட காய படுக்கைப்புண் சிகிச்சை மையம் மற்றும் மாடித்தோட்ட வளாகம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், மதுரையில் செயற்கை கால்களை தயாரிக்கும் மையமும் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்