கத்தியை காட்டி மருந்தகத்தில் மிரட்டல் - போதைக்காக தூக்கமாத்திரைகள் திருட்டு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மருந்தகத்தில் போதைக்காக கத்திமுனையில் தூக்க மாத்திரைகளை பறித்துச் சென்ற இருவர் கைதாகியுள்ளனர்.
தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் மருந்து சீட்டு இல்லாமல் இருவர் கத்தியை காட்டி மிரட்டி தூக்க மாத்திரைகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மருத்துவமனை சிசிடிவி மூலம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஹரிகரன், ராஜேஷ் ஆகியோரை போலீசார் சம்பவம் நடைபெற்ற 2 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.