வரதட்சணை வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டவர் - சிறப்பு விமானம் மூலம் வந்தவர் சென்னையில் கைது
வரதட்சணை கொடுமை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆந்திரா வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது ஆந்திரா மாநிலம் சித்தூரை சோ்ந்த கோபிநாத் என்பவரின் பாஸ்போா்ட்டை ஆய்வு செய்த போது, கடந்த 3 ஆண்டுகளாக வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் கோபிநாத்தை வெளியே விடாமல் அறையில் அடைத்து வைத்து நெல்லூா் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். நெல்லூரில் இருந்து தனிப்படை போலீசாா் சென்னை வந்து கோபிநாத்தை கைது செய்து ஆந்திராவிற்கு அழைத்து சென்றனா்.