சென்னையில் அதிகாலை நேரத்தில் மழை - மாநகர் பகுதிகளில் கனமழை பெய்த‌து

சென்னை மற்றும் புறநகரில் அதிகாலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

Update: 2021-10-05 02:53 GMT
சென்னை மற்றும் புறநகரில் அதிகாலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய்யம் தெரிவித்திருந்த‌து. இந்நிலையில் இன்று விடியற்காலை 4 மணியளவில் சென்னையில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. மாநகர் பகுதிகளான மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்த‌து. இதேபோல் அடையாறு திருவான்மியூர், கிண்டி, சைதாபேட்டை போன்ற இடங்களிலும் பரவலாக மழை பொழிவு காணப்பட்டது. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, நீலாங்கரையிலும் அதிகாலை நேரத்தில் மழை பெய்த‌து.
Tags:    

மேலும் செய்திகள்