நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் - ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நீர்நிலைகளில் உயிரிழப்பை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள், கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-10-01 14:20 GMT
தமிழகத்தில் ஏரி, ஆறு, அருவி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோட்டீஸ்வரி என்பவர் மனுதாக்கல் செய்தார். நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும், நீச்சலில் நிபுணத்துவம் வாய்ந்த பாதுகாப்பு குழுவை பணியமர்த்த வேண்டும், கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, மனுதாரரின் பரிந்துரைகளை செயல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இது குறித்து பதில் அளிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. மனுதாரரின் கோரிக்கைகளை செயல்படுத்த சாத்திய கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


Tags:    

மேலும் செய்திகள்