பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி - பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி

திசையன்விளையில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக வந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-01 12:27 GMT
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தை சேர்ந்த லியோனுக்கும், அந்தோணி பிச்சை என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக பிரச்சினை இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக திசையன்விளை காவல் நிலையத்தில் அந்தோணி பிச்சை மீது லியோன் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் நிலத்தை அளவீடு  செய்த வருவாய்த்துறையினர் அந்த இடம் லியோனுக்கு உரியது என கூறினர். இதன்பிறகு கட்டுமான பணிகளை லியோன் ஆரம்பித்த போது அந்தோணி பிச்சை தகராறு செய்ததோடு லியோனின் மகளை அவர்கள் தாக்கினர். மேலும் அந்த பெண்ணை அவர்கள் மானபங்கபடுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags:    

மேலும் செய்திகள்