"தேர்தல் ஆணையத்தின் செயல்- சட்ட விரோதமில்லை" - சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் ஏற்றது, சட்டவிரோதம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கட்சியின் பொதுக்குழு கூடி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது.
புதிய பதவிகளுக்கான தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அதில், அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென்றும், புதிய பதவிக்கான தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றதில் எந்த சட்ட விரோதமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
உட்கட்சி விதிகள் பின்பற்றப்பட்டதை தேர்தல் ஆணையம் ஆராய முடியாது என்று கூறிய நீதிபதிகள்,
உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும், இது தொடர்பாக சிவில் வழக்குதான் தொடர முடியும் எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.