"நீட் தேர்வு- புதிய சட்டம் இயற்றப்படும்" - மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பு சட்டப்பேரவையில் தாக்கல்

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுதுறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Update: 2021-09-02 11:25 GMT
மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு தாக்கத்தை ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரையை ஆய்வு செய்த தலைமைச்செயலாளர் தலைமையிலான குழு, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைத்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவக்கல்வி சேர்க்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால் ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்திற்கான சமூகநீதி, பாதுகாப்பை உறுதி செய்யும் என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்து. மத்திய அரசு வழங்கியுள்ள ஓபிசி பிரிவினருக்க 27 சதவீத இடஒதுக்கீடு இந்தாண்டு முதல் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்