மேட்டுப்பாளையம்- சி.டி.ஸ்கேன் வசதி உறுதி: பேரவையில் அமைச்சர் மா.சு. திட்டவட்ட தகவல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு ஒன்றரை கோடி ரூபாயில் சி.டி.ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும் என என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ், இதுகுறித்து கேட்டார். அதற்கு, பதிலளித்த மா.சுப்பிரமணியன், மாதத்துக்கு சராசரியாக 32 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும், மேட்டுப்பாளையம் தாலுகா மருத்துவமனையில் புதிய சி.டி. ஸ்கேன் வசதி, ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றார்.