வி.ஏ.ஓ அலுவலகத்தில் விவசாயி தாக்கப்பட்டதாக புகார்.... அன்னூரில் கடைகள் அடைப்பு
கோவை மாவட்டம் அன்னூரில் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
கோவை மாவட்டம் அன்னூரில் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி விவசாயி கோபால்சாமி என்பவர் தனது நிலத்திற்கான ஆவணங்களை சரிபார்க்க சென்றார். அப்போது கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்ததாக கோபால் சாமி மீது புகார் எழுந்த நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே கோபால் சாமியை முத்துசாமி ஆபாசமாக பேசி தாக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் முத்துசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.