ஆபாச படங்களை காட்டி பணம் பறிப்பு :கடந்த 2 மாதத்தில் மட்டும் 4 பேரிடம் மோசடி

ஆண்களை குறிவைத்து மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வரும் நிலையில், தெரியாதவர்களின் அழைப்புகளை எடுத்து பேசி ஆபத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர்...

Update: 2021-08-06 07:05 GMT
ஊரடங்கால் எல்லாமே ஆன்லைன் என்றாகிவிட்ட சூழலில் இணையத்தில் அதிக நேரம் செலவிடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதற்கேற்றார் போல சைபர் க்ரைம் குற்றங்களும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது... 

விதவிதமாக மோசடிகளோடு சுற்றி வரும் கும்பல் இப்போது ஆண்களின் பலவீனத்தை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. பேஸ்புக்கில் கவர்ச்சியான பெண்களின் போட்டோக்களை வைத்து பெண்களின் பெயரையும் வைத்து ஏராளமான ஃபேக் ஐடிக்கள் உள்ளன.

போலி ஐடிக்கள் மூலம், பேஸ்புக்கில் உள்ள ஆண்களிடம் நட்பாக பேசுவது போல வலை வீசுகிறார்கள். பின்னர் அவர்களின் செல்போன் நம்பர்களை வாங்கிக் கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு வீடியோ கால் செய்யும் போது எதிர்முனையில் ஒரு பெண் நிர்வாண கோலத்தில் நிற்கிறார். அப்போது ஆணையும் அதுபோல் நிர்வாணமாக நிற்க சொல்லி நிர்பந்தப்படுத்துவதோடு அதை அப்படியே ரெக்கார்டு செய்து கொள்கிறார்கள். 

பின்னர் அந்த நிர்வாண வீடியோவே அவர்களின் ஆயுதமாகிப் போகவே அதைக் காட்டியே பணம் பறிக்கும் வேலையில் அந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. இப்படியாக கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 4 பேர் 19 லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்திருக்கிறார்கள் என்கிறது சைபர் க்ரைம் தரப்பு...

இதற்காக இணையதளங்களையும் உருவாக்கிக் கொண்டு அந்த கும்பல் பணத்தை மிரட்டி பறிக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறது. இதில் சிலர் தொடர்ச்சியாக பணத்தை இழந்து வருவதும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது...

அடையாளம் தெரியாதவர்களின் அழைப்புகளை எப்போதும் ஏற்க வேண்டாம் என எச்சரிக்கும் போலீசார், வீடியோ கால் வந்தால் அதை உடனே கட் செய்து  விடுங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்