உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் பேரவை தேர்தல் - தனித்துப் போட்டி என மாயாவதி அறிவிப்பு

உத்தரப்பிரதேசம், உத்தராகண்டில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என மாயாவாதி தெரிவித்துள்ளார்

Update: 2021-06-27 05:23 GMT
உத்தரப்பிரதேசம், உத்தராகண்டில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என மாயாவாதி தெரிவித்துள்ளார்

உத்தரப்பிரதேசத்தில் ஏ.ஐ.எம்.​ஐ​.எம். கட்சியுடன் இணைந்து பகுஜன் சமா​ஜ் கட்சி போட்டியிட உள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை, மாயாவதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இத்தகைய செய்தி முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது, தவறாக மக்களை வழிநடத்தும் வகையில் உள்ளது என்றும், அந்த செய்தியில் துளி அளவு கூட உண்மையில்லை என தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் நீங்கலாக உத்தரப்பிரதேசம், உத்தராகண்டில் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், எந்த கட்சி உடனும் கூட்டணி அமைத்து போட்டியிடாது எனவும் மாயாவதி தெளிவுப்படுத்தி உள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தலைவர்கள் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க, மாநிலங்களவை உறுப்பினரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான சதீஷ் சந்திர மிஸ்ராவை, கட்சியின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளராக நியமித்து உள்ளதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சி பற்றி எழுதுவதற்கு முன்பு, ஊடக பிரிவை தொடர்பு கொண்டு விசாரித்து முறையாக செய்திகளை வெளியிடும் படியும் மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்