"சென்னையில் குறைந்து வரும் கொரோனா"

சென்னையில், கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 5 புள்ளி 5 சதவீதம் குறைந்துள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2021-06-06 11:41 GMT
"சென்னையில் குறைந்து வரும் கொரோனா"
 
சென்னையில், கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 5 புள்ளி 5 சதவீதம் குறைந்துள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.மண்டலம் வாரியான கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், பெருங்குடி மண்டலத்தில் 10 புள்ளி 6 சதவீதம் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்ணாநகர் மண்டலத்தில் 8 புள்ளி 2 சதவீதம், திருவொற்றியூர் மண்டலத்தில் 7 புள்ளி 2 சதவீதம், அம்பத்தூரில் 7 சதவீதம் குறைந்துள்ளது.ஆலந்தூர் மண்டலத்தில் 7 சதவீதம், சோழிங்கநல்லூரில் 6 புள்ளி 4 சதவீதம், கோடம்பாக்கத்தில் 6 புள்ளி 3 சதவீதம், குறைந்திருக்கிறது.மாதவரம் மண்டலத்தில் 6 புள்ளி 1 சதவீதம், வளசரவாக்கத்தில் 5 புள்ளி 3 சதவீதம், மணலியில் 4 புள்ளி 8 சதவீதம் குறைந்துள்ளது.அடையாறு மண்டலத்தில் 3 புள்ளி 1 சதவீதம், தேனாம்பேட்டையில் 2 புள்ளி 7 சதவீதம், தண்டையார் பேட்டையில் 2 புள்ளி 6 சதவீதம் தொற்று குறைந்து உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.அதே நேரத்தில்,  ராயபுரம் மண்டலத்தில் 0.7 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும்,திரு.வி.க.நகர் மண்டலத்தில் ஒரே நிலையில் நீடிப்பதாகவும் கூறியுள்ளது.மொத்தமாக சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 5 புள்ளி 5 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்