"கத்தாரில் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள்" - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கத்தாரில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உட்பட 24 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2021-05-26 03:02 GMT
"கத்தாரில் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள்" - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

கத்தாரில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உட்பட 24 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கத்தாரில் சிறையில் உள்ள மீனவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் அவர்களது குடும்பம் கவலை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே சிறையில் உள்ள 24 இந்திய மீனவர்களும் தாயகம் திரும்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கடிததத்தில் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்