கொரோனா நோயாளி உயிரிழப்பு - 3 லட்சம் மேல் செலுத்தச் சொல்லி ரசீது தந்த தனியார் மருத்துவமனை!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் கேட்டதால், உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.

Update: 2021-05-24 06:36 GMT
மார்த்தாண்டம் அருகேயுள்ள குன்னம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கும், இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ராமசாமியின் மனைவி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ராமசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ராமசாமியின் உறவினர்களிடம் சிகிச்சை கட்டணமாக 3 லட்ச ரூபாய், மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கணவன் - மனைவி இருவரையும் ஒரே அறையில் வைத்து சிகிச்சை அளித்ததாகவும், தேவையில்லாத காரணங்களை சேர்த்து அதிக கட்டணம் கேட்பதாகவும் கூறி, உடலை வாங்க மறுத்தனர். கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில், மருத்துவமனையிலேயே உடல் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்